கீரைகள்
பொதுவாக எல்லாக் கீரைகளாலும் நல்ல பலனுண்டு. இரும்புச் சத்துள்ளது. கீரைகளைப் பயன்படுத்து முன் சுத்தம் செய்ய வேண்டும். பழுப்புகளை நீக்க வேண்டும். முற்றிய நரம்புகள் இல்லாமல் ஆயவேண்டும். இலைகளின் அடிப்பாகத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அவை நோயால் தாக்கப்பட்டவையாகும். அவைகள் நுண்கிருமிகளின் முட்டைகள் ஆகும். அதுபோன்ற கீரைகளைப் பயன்படுத்தினால் வயிற்றுப் போக்குண்டாகும். அகத்திக்கீரை வேகாமல் கெட்டது அகத்தி என்பர், பருப்புடன் சாம்பார் செய்தோ, வெங்காயத்துடன் துவட்டல் செய்தோ சாப்பிடலாம். சிறுகசப்பாக இருக்கும் நன்றாக வெந்தால் சுவையாக இருக்கும். […]