காய்கள்
வாடி வதங்கிய காய்களை சமைக்கக் கூடாது. காய்களை கழுவியோ அல்லது சுத்தமான வெள்ளைத் துணியால் துடைத்தபின் சமைக்கலாம். அவரைக்காய் முற்றிய நிலையில் உள்ள காய்களை நோய் எதுவும் இல்லாதவர்கள், குழம்பு, பொரியல் செய்து சாப்பிடலாம். எலும்புகள் வளர்ச்சி பெறும். வெள்ளைப் பிஞ்சு அவரைக் காயை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். வாதம், பித்தம், கபம் நீக்கும். வாளவரையை சமைத்துண்ண சுவையாயிருக்கும். பித்தம் அதிகரிக்குமாதலால் அளவோடு உண்ண வேண்டும். அத்திக்காய் இதன் காயை பிட்டு அவியல் செய்து பாசிப்பருப்பு பூண்டு […]