உணவுகள்

அவரைப்பிஞ்சு, அத்திப்பிஞ்சு, கத்திரிபிஞ்சு, கோதுமை, சீரகம், துவரம் பருப்பு, நெய், பால், புடலம்பிஞ்சு, பொன்னாங்கண்ணி கீரை, முளைக்கீரை, மிளகு, முருங்கைப் பிஞ்சு, வாழைப்பிஞ்சு, அகத்திக்கீரை, இளநீர், கல்யாண பூசணி, கடுகு, கடலைப்பருப்பு, காராமணி, கொத்தவரை, தயிர், தேங்காய், சிறுகீரை, பரங்கிக்காய், பலாப்பழம், பாகற்காய், பாசிப்பயிறு, புளி, பூண்டு, பெருங்காயம், மாங்காய், மாதுளை, மாமிசவகை, முற்றிய கத்தரி, மோர், வெல்லம் இவைகளை நாம் உணவில் சேர்ப்பது நல்லது

பழங்கள்

அத்திப்பழம் ரோஸ் நிறத்தில் எலுமிச்சம்பழ அளவில் இருக்கும். அத்தி பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை என்பர். உள்ளே சொத்தை யாகிப் போனமாதிரி கருப்பாகத் தெரியும் உள்ளே இருப்பவைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் கழுவி சாப்பிடலாம். மார்பு வலிக்கு சிறந்தது. மலச்சிக்கலை நீக்கும். உடல் வலுப் பெறும். அன்னாசிப்பழம் புற்றுநோய், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவர நோய் குணமாகும். பல், சரும நோய்களை குணப்படுத்தும் இதன் சாற்றினைப் பருக சிறு காயங்கள், புண்களை ஆற்ற வல்லது. அறுவை சிகிச்சை செய்து […]

பழங்கள் Read More »

கிழங்குகள்

எந்தக் கிழங்கானாலும் முதலில் நன்றாகக் கழுவ வேண்டும் தோல் நீக்கக் கூடிய கிழங்குகளில் தோலை நீக்கி விட வேண்டும் வெள்ளை முள்ளங்கி, வாழையின் மேல் தண்டு, காரட் தவிர பூமிக்கு அடியில் விளையும் எந்தக் கிழங்கையும் – நீரிழிவு நோயாளிகள் சமையலில் சேர்த்து உண்ணக்கூடாது. உருளைக்கிழங்கு கொழுப்புச் சத்து நிறைந்தது. இதை இரண்டாக அறுத்து தீக்காயங்கள் மீது தடவ இதமாக இருக்கும். கால்களில் இருக்கும் கரும்படைகள் மீது அடிக்கடி தேய்த்து வர கரும்படை மறையும். உடல் உழைப்பு

கிழங்குகள் Read More »

காய்கள்

வாடி வதங்கிய காய்களை சமைக்கக் கூடாது. காய்களை கழுவியோ அல்லது சுத்தமான வெள்ளைத் துணியால் துடைத்தபின் சமைக்கலாம். அவரைக்காய் முற்றிய நிலையில் உள்ள காய்களை நோய் எதுவும் இல்லாதவர்கள், குழம்பு, பொரியல் செய்து சாப்பிடலாம். எலும்புகள் வளர்ச்சி பெறும். வெள்ளைப் பிஞ்சு அவரைக் காயை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். வாதம், பித்தம், கபம் நீக்கும். வாளவரையை சமைத்துண்ண சுவையாயிருக்கும். பித்தம் அதிகரிக்குமாதலால் அளவோடு உண்ண வேண்டும். அத்திக்காய் இதன் காயை பிட்டு அவியல் செய்து பாசிப்பருப்பு பூண்டு

காய்கள் Read More »

கீரைகள்

பொதுவாக எல்லாக் கீரைகளாலும் நல்ல பலனுண்டு. இரும்புச் சத்துள்ளது. கீரைகளைப் பயன்படுத்து முன் சுத்தம் செய்ய வேண்டும். பழுப்புகளை நீக்க வேண்டும். முற்றிய நரம்புகள் இல்லாமல் ஆயவேண்டும். இலைகளின் அடிப்பாகத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அவை நோயால் தாக்கப்பட்டவையாகும். அவைகள் நுண்கிருமிகளின் முட்டைகள் ஆகும். அதுபோன்ற கீரைகளைப் பயன்படுத்தினால் வயிற்றுப் போக்குண்டாகும். அகத்திக்கீரை வேகாமல் கெட்டது அகத்தி என்பர், பருப்புடன் சாம்பார் செய்தோ, வெங்காயத்துடன் துவட்டல் செய்தோ சாப்பிடலாம். சிறுகசப்பாக இருக்கும் நன்றாக வெந்தால் சுவையாக இருக்கும்.

கீரைகள் Read More »

எண்ணெய் வகைகள்

தேங்காய் எண்ணெய் தலைக்கு தினமும் சுத்தமான எண்ணெய் தடவுவதால் முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வளரும். குளிர்ச்சியைத் தரும். மணிலா எண்ணெய் கொழுப்புச் சத்து மிக்கது. சமையலுக்கும் பலகாரம், இனிப்பு செய்வதற்கும் இதைப் பயன்படுத்துவர். ரீபைண்டு ஆயில் உபயோகிப்பது நல்லது. உடலுக்கு வலுவைத் தரும். எள் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும். கொழுப்பு சத்து குறைவானது. மருத்துவத்துக்கு பயன்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் மருத்துவதிற்கும், விளக்கு எரிக்கவும் பயன்படுகிறது.   வேப்பெண்ணெய் மருத்துவத்துக்கும, சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது. இலுப்பை எண்ணெய்

எண்ணெய் வகைகள் Read More »

பருப்பு மற்றும் பயிறு வகைகள்

துவரம் பருப்பு குழம்பு, கூட்டு, பொரியலில் சேர்த்து சாப்பிட இரைப்பை, குடல் பலம் பெறும் எல்லா நோய்களுக்கும் பத்திய உணவாக சாப்பிடலாம். கடலைப் பருப்பு நுரையீரலுக்கு பலத்தைக் கொடுக்கும் மலச்சிக்கலை நீக்கும். மூலவியாதி உள்ளவர் இதனால் செய்த உணவு, பலகாரம் சாப்பிடக் கூடாது. உளுத்தம்பருப்பு இட்லி, தோசைக்கு அரிசியுடன் சேர்க்க படுவதால் சுவை உண்டாகிறது. வடை செய்தும் உண்பர் இடுப்பு வலி குறையும். உளுத்தங்கஞ்சி காசநோய் உள்ளவர்கள் சாப்பிடக் குணமாகும். நினைவாற்றல் பெருகும். பாசிப்பருப்பு பொங்கலில் சேர்த்து

பருப்பு மற்றும் பயிறு வகைகள் Read More »

தானியங்கள்

அரிசி உடலில் உள்ள எல்லா உறுப்புக்களுக்கும் உயிர்ச்சத்தை கொடுக்கக் கூடியதாக உள்ளது. மனிதனுக்கு தேவையான உணவில் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. பச்சை அரிசி நெல் குற்றியதும் அரிசிச் சூடுதணிய வேண்டும். பாலிப்பையில் வைத்து மூட்டையாக்குவதோ, பெரிய டிரம் போன்றவற்றிலோ டின்னிலோ இருப்பு வைப்பதால் 10 நாட்களில் வண்டு, புழுவைத்துவிடும். கோணிப்பையில் மூட்டைகட்டி அதில் நொச்சித்தழைகளைப் போட்டால் வண்டு, புழு வைக்காது. பச்சை அரிசி சாதம் உண்பவர்கள் சிறிது நெய் சேர்த்துண்ண வேண்டும். பச்சை அரிசி நொய்யுடன்

தானியங்கள் Read More »

சமையல் பொருட்கள்

மிளகு பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்; இதை உணவில் பயன்படுத்துவதால் அதில் உள்ள நச்சுத்தன்மையை அழிக்கிறது. பொங்கல் உண்ணும் போது சேர்த்தே சாப்பிட வேண்டும். பெண்கள் இதை ஒன்றிரண்டாக உடைத்து வடைக்கும் பொங்கலுக்கும் பயன்படுத்த வேண்டும். கடுகு ஒரு பிடிகடுகை 3 விட்டர் தண்ணீரில் காய்ச்சி கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் 2 பாதங்களை 10 நிமிடம் வைத்து எடுக்க தூக்கமின்மை, சன்னி, மனச்சோர்வு, பயம், படபடப்பு, சித்தப்பிரமை, அரட்டல், புரட்டல், மனக்குழப்பம் போன்றவை

சமையல் பொருட்கள் Read More »

Scroll to Top