பழங்கள்

அத்திப்பழம்

ரோஸ் நிறத்தில் எலுமிச்சம்பழ அளவில் இருக்கும். அத்தி பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை என்பர். உள்ளே சொத்தை யாகிப் போனமாதிரி கருப்பாகத் தெரியும் உள்ளே இருப்பவைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் கழுவி சாப்பிடலாம். மார்பு வலிக்கு சிறந்தது. மலச்சிக்கலை நீக்கும். உடல் வலுப் பெறும்.

அன்னாசிப்பழம்

புற்றுநோய், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவர நோய் குணமாகும். பல், சரும நோய்களை குணப்படுத்தும் இதன் சாற்றினைப் பருக சிறு காயங்கள், புண்களை ஆற்ற வல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சாப்பிட விரைவில் காயங்கள் ஆறும். நீரிழிவு நோயாளிகள் காலில் புண், காயம் உண்டானால் இதன் சாற்றை சாப்பிட விரைவில் குணமாகும்.

ஆப்பிள் பழம்

தினமும் படுக்குமுன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர வயிறு, ஈரல், மூளைக்கு சிறந்தது. இதயம் வலுப்பெறும் சிறு நீரகக் கோளாறு இரத்தச் சோகையைக் குணப்படுத்தும். இரத்த அழுத்தம் சீராகும். இரத்த விருத்தியுண்டாக்கும். பல்சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்லது சீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும்.

ஆரஞ்சுப்பழம்

கமலா ஆரஞ்சு என்றும் கூறுவர். பித்த வாந்தியை நிறுத்தும் சீரண சக்தி அதிகரிக்கும். காசநோய், அம்மை உள்ளவர்கள் சாப்பிடுவர சீராண குணத்தை ஏற்படுத்தும் சிறுநீர் நன்கு வெளியேறும் வயிறு மந்தம் இருக்காது எலும்பு, பற்கள் வலுப்பெறும் மலச்சிக்கலை போக்கும்.

இலந்தைப்பழம்

இதைப்பிட்டு புழு இருக்கிறதா என்பதைப் பார்த்து சாப்பிட வேண்டும். நெஞ்சு வலியைக் குறைக்கும்.

உலர்ந்த திராட்சைப் பழம்

இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பச்சையாக உள்ள பழங்களை விட உலர்ந்த பழங்கள் எட்டு மடங்கு சக்தி வாய்ந்தது. நச்சுத்தன்மை, இரத்தச்சோகை குணமாக்கும். உடல் எடை கூடும். பாலியல் பளவீனங்கள் மலச்சிக்கலை நீக்கும். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர் தினம் 10 பழம் சாப்பிட அழுத்தம் சீராகும். குடற்புண், இடுப்புவலி, மூட்டுவலி, நரம்புத்தளர்ச்சி, ஆண், பெண் மலட்டுத்தன்மை ஆகியவைகளைக் குணப்படுத்தும். புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் 10 பழமாக 3 மாதம் சாப்பிட புற்றுநோய், பரவாமல் தடுக்கலாம். சாதாரண மானவர்கள் தினம் 10 பழம் சாப்பிட்டு வர தேகாரோக்கியம் உண்டாகும்.

எலுமிச்சம்பழம்

இரப்பை புண் குணமாகும். செரியான சக்தியை அதிகரிக்கும் உடலில் நச்சுத்தன்மை நீக்கும். மலச்சிக்கலைப் போக்கும் சாற்றை தண்ணீருடன் கலந்து சாப்பிட பித்தம் குறையும் தேனும் சாறும் கலந்து வெறும் வயிற்றில் தினமும் காலையில் பருகிவர, உடல் இளைக்கும். சாற்றில் சர்க்கரை சேர்த்துப் பருக உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் வாய்துர்நாற்றம், வயிற்றுப் போக்கு இவைகளை நீக்கும்.

கொய்யாப்பழம்

சிறுவர்கள் உண்டால் சளி பிடிக்கும். இப்பழத்தின் உட்பகுதி ரோஸ் நிறமுடையதாக இருப்பது மிகவும் நல்லது சிறு நீரகத்தில் உள்ள கற்களை உடைக்கும் செங்காயாக உள்ளதை நீரிழிவு நோயளிகள் சாப்பிட சர்க்கரை கட்டுக்குள் வரும். மலச்சிக்கலை நீக்கும்.

சப்போட்டா பழம்

தொண்டைப்புண்ணை குணமாக்கும். இரும்பு சத்துடையது எலும்பு, பற்களைப் பலப்படுத்தும், வயிற்றுப்போக்கு வயிற்றுக் கடுப்பு குணமாக்கும் கர்ப்பப்பை கோளாறுகளை அகற்றும்.

சாத்துக்குடி

காய்ச்சல் கண்டவர்கள் சாற்றைப்பருக சுர வேகம் தணியும் முறைச்சுரம் (டைப்பாயிடு) உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் தினமும் பருகிவர நோய்கள் குணமாகும். உணவு செரிமானமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.

தக்காளிப்பழம்

தினமும் குழம்பு ரசம் வைக்க தேவையாக உள்ளது. வெங்காயம், தக்காளி வதக்கி சட்னி செய்துண்பர் குருமா குழம்பு வைக்கவும் தேவைப்படுகிறது. சாதாரணமாக பழத்தை அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப்பழத்தின் மருத்துவ குணம் இதற்கும் உண்டு. உடலின் உள்உறுப்புகள் பலம் பெறும் ஈரல் குறைப்பாட்டை நீக்கும், பித்தம் குறையும். மலச்சிக்கல் தீரும்.

நாவப்பழம்

தினமும் 20 பழங்கள் சாப்பிட சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் கொட்டைகளை காய வைத்து இடித்து சூரணம் செய்து, தினமும் 3 சிட்டிகை சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

தர்பூசணிப்பழம்

இதை குமட்டிப்பழம் என்றும் கிர்ணிப்பழம் என்றும் கூறுவர். கோடையில் கிடைக்கும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். தாக வறட்சியைப் போக்கும் வேனல் கட்டிகள் முகப்பருக்களைக் குணமாக்கும். அம்மை மற்றும் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் 3 (அ) 4 பத்தை சாப்பிட நோய் விரைவில் குணமாகும்.

திராட்சைப்பழம்

பசுமை நிறத்திலும், கருப்பு நிறத்திலும் இளம் ஊதா நிறத்திலும் பன்னீர் திராட்சை என்றும் மூவகையாக உள்ளது. கருப்பு மற்றும் பச்சை குண்டு குண்டாக இருக்கும் பழங்கள் சிலவகை புளிக்கும் கொட்டையற்ற திராட்சை பழம் மற்றும் பன்னீர்திராட்சைப் பழம் இனிக்கும் இதனை சாப்பிட்டு வர உடல் வலுவடையும் இரத்த ஓட்டம் சீராகும் ஆண், பெண் பாலுணர்வைத் தூண்டும் இரத்தவிருத்தியும், சுத்தியும் உண்டாகும். உணவு செரிமானம் ஆகும். தினம் 100 கிராம் தோல், மற்றும் கொட்டையுடன் சாப்பிட உடல் இளைக்கும்.

நுங்கு

இளசான நுங்கை உண்பதால் உடல் குளிர்ச்சி பெறும் மலச்சிக்கலைப் போக்கும் சிறுவர்கள் அதிகம் உண்டால் வயிற்றுப் போக்கு உண்டாகும். நன்றாக முற்றிய கல்போல் உள்ளதை உண்டால் வயிற்று வலி உண்டாகும்.

பப்பாளிப்பழம்

இரத்த ஓட்டம் சீராகும். இரத்த சுத்தி உண்டாகும். உணவு செரிமானம் ஆகும். இரப்பை, குடல் சருமம், மற்றும் மாத விலக்கு கோளாறுகள் நீங்கும். தொண்டை நோய், அழற்சி குணமாக்கும். மண்ணீரல் நன்கு இயங்கச் செய்யும் உடல் பருமன் குறையும். இரத்தச் சோகையைக் குணமாக்கும். நினைவாற்றலைப் பெருக்கும். கிடைக்கும் காலங்களில் தினமும் 10 துண்டுகளை சாப்பிட்டு வரலாம்.

பலாப்பழம்

சுளைகள் ருசியாக இருக்கும். பித்தத்தை அதிகரிக்கும் பச்சையாக உள்ள கொட்டைகளை குருமா குழம்பு செய்வர் வாயுவை அதிகப்படுத்தும் வாதம், மூலம், இருமல் உள்ளவர்கள் சாப்பிட்டால் நோயை அதிகப்படுத்தும்.

பனம்பழம்

சாப்பிடக் கூடிய பழமல்ல. புசித்தால் பித்தம் கூடும். மலத்தை இறுக்கும். சொறி, சிரங்கு, புண்கள் ஆறாது.

பிளம்ஸ்பழம்

இதனை ஊட்டி ஆப்பிள் என்பர். புளிப்பு கலந்த இனிப்பு ஆகும். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடலாம்.

பேரீச்சம்பழம்

சர்க்கரையை விட அதிக இனிப்பு தன்மையுள்ளது. இரும்புச் சத்துள்ளது. இரத்தம் அபிவிருத்தி செய்யும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். மலச்சிக்கலை நீக்கும் பாலியல் பலவீனத்தை தடுத்து சக்தியை அதிகரிக்கச் செய்யும். இரத்தச் சோகையை நீக்கும். 2,3 பழம் சாப்பிட்டு 1 டம்ளர் இளஞ்சூடான பாலைக்குடித்து விட்டுப் படுக்க நல்ல தூக்கம் வரும். மருத்துவத்துக்கு அங்கங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.

மாதுளம்பழம்

இனிப்பாக சற்றே துவர்ப்பாக இருக்கும் இதன் வேர், பட்டை, இலை, பூ அனைத்தும் மருத்துவத்துக்கு, பயன்படுகிறது. பித்த, வாந்தியை நிறுத்தும்.  செரிமான சக்தி அதிகரிக்கும். இதன் காயை சாறு பிழிந்து சாப்பிட கர்ப்ப வாந்தி நிற்கும். குழந்தைகள் முதிர்ந்த முத்துக்களைச் சாப்பிட வளர்ச்சியடைவார்கள் மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். சர்க்கரை நோயாளி தவிர மற்ற அனைவரும் அடிக்கடி சாப்பிட நல்ல பலனைத் தரும். ஆண்மை குறைந்தவர்கள் தினமும் இரவில் சாப்பிட்டு வர ஆண்மையை அதிகரிக்கும்.

மாம்பழம்

நல்லவகை வகையான ருசியுள்ள பழங்கள் கிடைக்கின்றன. அதிக உஷ்ணத்தைக் கொடுத்தாலும் மலச்சிக்கலை நீக்கும் கண்பார்வை தெளிவு பெறும் உடல் எடை கூடும் அதிகம் உண்டால் வயிற்றுப் போக்கு உண்டாகும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

முலாம்பழம்

வெள்ளரிப் பழத்தின் இனத்தை சேரும் குடலில் உள்ள கொடிய விஷக் கிருமிகளை அழிக்கக்கூடியது. குடற் கோளாறுகளை நீக்கும்.

வாழைப்பழம்

இதில் அநேக வகை உள்ளது பேயன், மொந்தன், பூவன், கற்பூரவாழை, ரஸ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை, மலைவாழை, நேந்திரம்பழம் இப்படியாக கிடைக்கிறது. பச்சை வாழைப்பழத்தை உண்ண மலத்தை இறுக்கும். மலைவாழை மற்றும் பூவன் பழத்தை உண்ண மலச்சிக்கலைப் போக்கும். செவ்வாழைப் பழத்தை தினம் இரண்டை ஆண், பெண் சாப்பிட மலட்டுத் தன்மையை நீக்கும் பேயன் வாழை அம்மை கண்டவர்களுக்கு கொடுக்கலாம். சீதள உடம்புள்ளவர்கள் சாப்பிட சளி பிடிக்கும். மொந்தன், பேயன், கற்பூரவல்லி மருத்துவத்துக்கு பயன்படுகிறது பூவன் வாழைப் பழத்தை குழந்தைகள் சாப்பிட சளி பிடிக்கும் நேந்திரம் வாழைப்பழத்தை சாப்பிட கண் கோளாறுகள் நீங்கும்.

விளாம்பழம்

ஆட்டிப்பார்க்க ஆடும் சத்தம் கேட்கும் அதுவே பழுத்த பழமாகும். புளிப்பு கலந்த இனிப்பு. உடல் பலம் பெறும் இதன் ஓடு மருத்துவத்துக்கு பயன்படுகிறது.

வெள்ளரிப்பழம்

சர்க்கரை சேர்த்து பழக்குழம்பு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் உடல் உஷ்ணம் குறையும். குளிர்ச்சியைத் தரும். மலச்சிக்கலை நீக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்திற்கு வலுவைத் தரும். பிஞ்சுகளை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும், தாகத்தைத் தணிக்கும். மாரடைப்பு வராது. கண்கள் குளிர்ச்சி பெறும்.

பம்ளிமாஸ்பழம்

இப்பழத்தை மஞ்சள் காமாலைக்கு தினசரி மூன்று வேலை 7 நாட்கள் சாப்பிட குணமாகும்.

குறிப்பு:

மேலே கூறிய பழங்களில், நாவற்பழம், கொய்யாவில் செங்காய் தவிர சர்க்கரை நோயாளிகள் வேறு பழங்களை உண்ணலாகாது. பச்சை வாழை மட்டும் வாரத்தில் ஒரு நாள் சாப்பிடலாம்.

1 thought on “பழங்கள்”

Comments are closed.

Scroll to Top