எண்ணெய் வகைகள்

தேங்காய் எண்ணெய்

தலைக்கு தினமும் சுத்தமான எண்ணெய் தடவுவதால் முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வளரும். குளிர்ச்சியைத் தரும்.

மணிலா எண்ணெய்

கொழுப்புச் சத்து மிக்கது. சமையலுக்கும் பலகாரம், இனிப்பு செய்வதற்கும் இதைப் பயன்படுத்துவர். ரீபைண்டு ஆயில் உபயோகிப்பது நல்லது. உடலுக்கு வலுவைத் தரும்.

எள் எண்ணெய்

குளிர்ச்சியைத் தரும். கொழுப்பு சத்து குறைவானது. மருத்துவத்துக்கு பயன்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்

மருத்துவதிற்கும், விளக்கு எரிக்கவும் பயன்படுகிறது.  

வேப்பெண்ணெய்

மருத்துவத்துக்கும, சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது.

இலுப்பை எண்ணெய்

மருத்துவத்துக்கும், விளக்கு எரிக்கவும், சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது.

சூரியகாந்தி எண்ணெய்

கொழுப்புச் சத்து இல்லாதது. சமையலுக்கும், பலகாரங்கள் செய்யவும் பயன்படுகிறது. அதிக பாதிப்பு இல்லை.

கருஞ்சீரக எண்ணெய், சிற்றாமணக்கு எண்ணெய்  

மருத்துவத்துக்கு மட்டுமே பயன்படக்கூடியவை.

பாமாயில்

சமையலுக்கும் பலகாரம் செய்யவும் பயன்படுகிறது. பாதிப்பு அதிகம் இல்லை.

பருத்தி எண்ணெய்

கொழுப்புச் சத்தில்லாதது. சமையலுக்கும் பயன்படுகிறது.

2 thoughts on “எண்ணெய் வகைகள்”

Comments are closed.

Scroll to Top