பருப்பு மற்றும் பயிறு வகைகள்

துவரம் பருப்பு

குழம்பு, கூட்டு, பொரியலில் சேர்த்து சாப்பிட இரைப்பை, குடல் பலம் பெறும் எல்லா நோய்களுக்கும் பத்திய உணவாக சாப்பிடலாம்.

கடலைப் பருப்பு

நுரையீரலுக்கு பலத்தைக் கொடுக்கும் மலச்சிக்கலை நீக்கும். மூலவியாதி உள்ளவர் இதனால் செய்த உணவு, பலகாரம் சாப்பிடக் கூடாது.

உளுத்தம்பருப்பு

இட்லி, தோசைக்கு அரிசியுடன் சேர்க்க படுவதால் சுவை உண்டாகிறது. வடை செய்தும் உண்பர் இடுப்பு வலி குறையும். உளுத்தங்கஞ்சி காசநோய் உள்ளவர்கள் சாப்பிடக் குணமாகும். நினைவாற்றல் பெருகும்.

பாசிப்பருப்பு

பொங்கலில் சேர்த்து செய்வர். கீரையில் கலந்து வேக வைத்து கடையல் மற்றும் கூட்டு செய்து சாப்பிடலாம். பாசிப் பயிறு கஞ்சி வைத்து சாப்பிட பித்த நோய்கள் மலச்சிக்கல் நீங்கும். முழுப்பச்சைப் பயிறை சுண்டல் செய்து நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பட்டாணிப்பருப்பு

குருமாகுழம்பு, பிரியாணி செய்ய உதவும், சுண்டல் செய்தும் சாப்பிடலாம் புரதச்சத்து மிகுந்தது.

சாரப்பருப்பு

கற்கண்டுடன் சேர்த்துண்ண நீர் சுருக்கு, நீர்எரிச்சல் நீங்கும். விந்துவை கெட்டிப்படுத்தும்.

பிஸ்தா மற்றும் பாதாம்பருப்பு

இதனை தூள் செய்து 1 ஸ்பூன் காய்ச்சிய பசும் பாலுடன் சேர்த்து பருகி வர மூளை மற்றும் கண்கள் பலம்பெறும். தாது விருத்தியாகும்.

தட்டைப் பயிறு

முத்திய நீரிழிவு வியாதியஸ்தர்கள் சுண்டல் செய்து சாப்பிட சக்திமிகும். சர்க்கரை அளவைக் குறைக்கும் வாயுவை உண்டாக்கும். எந்த நோயும் இல்லாதவர் இதைக் குழம்பில் கலந்து சாப்பிடலாம்.

காராமணிப்பயிறு (அல்லது) நரிப்பயிறு

இதனை வறுத்தும் சுண்டல் செய்தும் சாப்பிடலாம். உடைத்து துவரம் பருப்புக்கு பதிலாக இதனைச் சேர்த்து குழம்பு வைக்கலாம். புரதச்சத்து மிக்கது. உடல் வலுவடையும்.

மணிலாப்பயிறு

கொழுப்பு சத்தும் புரதச் சத்தும் அதிகம். வறுத்தப் பயிறை ஆட்டுப்பாலுடன் உண்ண உடல்பலம் பெறும். பல்வளர்ச்சிக்கு உதவும். இதனை அதிகம் சமையலில் சேர்த்துண்டால் காமாலை, இரைப்பை அழற்சி இதய எரிச்சல் ஏற்படும். சாதாரணவறுத்த பயிரை சாப்பிட பித்தம் கூடும். கொழுப்பு நீக்கிய எண்ணெயை மட்டுமே சமையலுக்கும், பலகாரம் செய்யவும் பயன்படுத்த வேண்டும்.

சோயாபீன்ஸ்

இட்லி மாவு அரைக்கும் போது சிறிது சேர்த்து அரைத்து உபயோகிக்க உடல் வலுப்பெறும். சப்பாத்தி மாவுடனும் கலக்கலாம். புரதச்சத்து அதிகம். நீரிழிவு இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட மிகவும் நல்லது.

கொண்டைக்கடலை இதில் கருப்பு, வெள்ளை இரண்டு ரகமுள்ளது. கருப்பாக இருக்கும் கடலை சுவை மிக்கது. புரதச்சத்து அதிகம். வெள்ளைக் கடலையில் சுவை குறைவு.  நீரிழிவு முற்றிய நோயாளிகள் சுண்டல் செய்து சாப்பிட சர்க்கரை அளவு குறையும். வாயுவை உண்டாக்கும் அளவுடன் சாப்பிட வேண்டும்.

1 thought on “பருப்பு மற்றும் பயிறு வகைகள்”

Comments are closed.

Scroll to Top