மிளகு
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்; இதை உணவில் பயன்படுத்துவதால் அதில் உள்ள நச்சுத்தன்மையை அழிக்கிறது. பொங்கல் உண்ணும் போது சேர்த்தே சாப்பிட வேண்டும். பெண்கள் இதை ஒன்றிரண்டாக உடைத்து வடைக்கும் பொங்கலுக்கும் பயன்படுத்த வேண்டும்.
கடுகு
ஒரு பிடிகடுகை 3 விட்டர் தண்ணீரில் காய்ச்சி கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் 2 பாதங்களை 10 நிமிடம் வைத்து எடுக்க தூக்கமின்மை, சன்னி, மனச்சோர்வு, பயம், படபடப்பு, சித்தப்பிரமை, அரட்டல், புரட்டல், மனக்குழப்பம் போன்றவை குணமாகும். தாளிதம் செய்ய அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது. பித்தம் அதிகரிக்கும்.
சீரகம்
சிறு குழந்தை இல்லா வீடும் சீரகம் இல்லா உணவும் சிறக்காது என்பர். மிளகாய்த் தூளிலும், ரசத்திலும் மற்றும் பொங்கல், முறுக்கு போன்றவற்றில் கலந்து செய்வர் சாதாரண காய்ச்சல், சளி, இருமல், பித்த உபரி இவைகளை நீக்கும் குணமுண்டு, குரல் வளம் பெருரும் வாய்ப்புண் தொண்டைப்புண் குணமாக்கும். மூலவலியைக் குறைக்கும்.
வெந்தயம்
வாய் முதல் ஆசனவாய் வரை ஏற்படும் புண்களை ஆற்ற வல்லது.
புளி
உணவில் அளவோடு சேர்க்க சீரண உறுப்புகள் சக்தி அதிகரிக்கும். அதிகமாக சேர்க்க நரை, திரை விரைவில் வரும்.
இஞ்சி
தினமும் பாலுடன் அல்லது டீயில் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அருந்த பித்தம் குறையும். செரிமானம் ஆக தேவையாயுள்ளது. சில இடங்களில் மருந்தாக கூறப்பட்டுள்ளது. இதன் சாறு எடுத்து காலையில் 1 டீஸ்பூன் சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
சுக்கு
பொட்டுக்கடலை, தேங்காய், சுக்கு அரைத்து துவையல் செய்து உணவுடன் உண்ணலாம். மருந்தாக அங்கங்கு கூறப்பட்டுள்ளது. இருமல், சளியைக் குறைக்கும் தூளாக்கி பாலில் போட்டு காபி, டீ தூளுக்கு பதிலாக அருந்தலாம். சுக்கு மற்றும் கொத்தமல்லி தூளுடன் பாலில் சர்க்கரை சேர்த்துக் குடிக்க பித்தம் குறையும் இரத்த ஓட்டம் சீராகும்.
பூண்டு
அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள மூலநோய் குணமாகும். இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும். தேவையான இடத்தில் மருந்தாக கூறப்பட்டுள்ளது.
கறிமஞ்சள்
சமையலில் பயன்படுத்தும் மஞ்சளினால், ஜலதோஷம் தலைவலி, கடிவிஷம் நீங்குவதுடன் பசியை அதிகப்படுத்தும் வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும்.
கசகசா
உணவில் சேர்த்து உண்டுவர நீர்சுளுக்கு, நீர்எரிச்சல், இரத்த மூலம், சீதபேதி, தாது நஷ்டம், தூக்கமின்மை போன்றவைக்கு குணமாகும்.
வெங்காயம் (சிறியது)
தினமும் பச்சையாகவே ஒரு வெங்காயம் சாப்பிட இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். இதயக் கோளாறை நீக்கும் பக்கவாத நோய்கள் வராது. ஈரலை பாதுகாக்கும் குடற்புண் குணமாகும். சுண்ணாம்பு சத்துள்ளது. சமையலில் அதிகம் சேர்த்து உண்பதால் உடல் வெப்பம் தணியும் பெண்கள் மாத விலக்கு, உதிரப்போக்கு போன்றவைக்கு மருந்தாக பயன்படுகிறது. தயிருடன் சேர்த்துண்ண பல் சம்பந்தப்பட்ட கோளாறு நீங்கும். கொழுப்புச் சத்தைக் குறைக்கும் குழம்பு, மசாலாக்களுடன் சேர்வதால் நல்ல சுவை கிடைக்கும், செரிமானத்துக்கு துணை புரிகிறது. வயிற்றுப்புண் குணமாகும்.
சுவைகள்
புளிப்பு
புளிப்பு சுவை அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து உண்டால் உடல் மதமதப்பு, சோர்வு, பாரிச வாயு, மலச்சிக்கல் ஆகியவை வரும். தூக்கம் குறையும், உடல்படபடப்பு தோன்றும். அளவுடன் குறைத்து உணவுப் பொருளில் சேர்க்க வேண்டும்.
கசப்பு
உடலில் தீங்கு செய்யும் நுண் கிருமிகளை அழிக்கும். நரம்புகள் பலப்படும். அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, நமைச்சல், தோல் வியாதிகள் வரும் அளவுடன் உண்ண வேண்டும்.
காரம்
காரச்சுவை வேறு, காரச்சத்து வேறு. உணவு செரிக்கவும், உமிழ்நீர் சுரக்கவும் காரம் தேவை. உமிழ்நீர் சுரப்பு குறைந்தால் செரிமானம் குறையும் மந்த பேதி உண்டாகும். மாமிசத்தில், குருமாவில், ஊறுகாயில் அதிகம் சேர்த்துண்பதால் குடற்புண் உண்டாகும். அளவுடன் உணவில் சேர்க்க வேண்டும்.
துவர்ப்பு
இரத்தத்தை வளப்படுத்தும் இரத்தப் போக்கை நிறுத்தும். இதுவே அதிகமானால் வாதம், முழங்கால் குடைச்சல், தூக்கமின்மை போன்றவை உண்டாகும். குறைந்தால் உடல்பெருக்கும். காமாலை, சோர்வு உண்டாகும். எனவே அளவுடன் பயன்படுத்த வேண்டும்.
உவர்ப்பு
அதிகரித்தால் சிறுநீர் அதிகமாக வரும். வாந்தி பேதி உண்டாகும். காய்ச்சல், பசியின்மை, புளிச்சேப்பம், வயிற்று வலி இவைகளை உண்டாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமே உதவுகிறது.
இனிப்பு
எண்ணெயில் செய்த இனிப்பை அதிகமாக உண்பதால் கொழுப்புச் சத்து அதிகமாகி உடல் பெருக்கும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். சர்க்கரை வியாதி வரும். ஒரு முறை அளவுடன் உண்ணலாம்.