ஆவாரம் பூ
இதன் இதழ்களைப் பறித்து சுத்தம் செய்து சூரணம் செய்து தினமும் காலையில் 3 சிட்டிகை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து பருக தேகம் காந்தி பெறும். நீரிழிவை கட்டுப்படுத்தும் “ஆவாரை இருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்பது முதுமொழி. இதழ்களை கூட்டு வைத்து சாப்பிட சிறுநீர் எரிச்சல், தாகம் நாவரட்சியைப் போக்கும். மருத்துவத்தில் இதன் பயன் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
வாழைப் பூ
நரம்பு நீக்கி துவரம் பருப்புடன் கூட்டு செய்தும் தனியே பொரியல் செய்தும் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் வெட்டை நோய், மூலநோய் குணமாவதுடன் சீதபேதி நிற்கும் குடற்புண்குணமாகும். சூதகவலி குறையும். இரத்த விருத்தியாகும். கர்ப்பக் கோளாறுகளை நீக்கும்.
தென்னம் பூ
பூக்களை சேகரித்து சூரணம் செய்து தினம் ஒன்றுக்கு 11/2 ஸ்பூன் தூளை 7 நாட்கள் சாப்பிட்டுவர அதிக ரத்தப் போக்கு நிற்கும்.
வேப்பம் பூ
பூவை நிழவில் உலர்த்தி பின் 1 நாள் வெய்யலில் உலர்த்தி ஒரு பாட்டலில் இருப்பு வைத்து வேப்பம்பூ குழம்பு வைத்து சாப்பிட பித்தம், வாதம் குணமாகும். ரசம் வைத்து சாப்பிட வயிறு உப்பிசம் நீங்கும். கஷாயம் செய்து பருக கல்லீரலை பாதுகாக்கும், துவையல் செய்தும் சாப்பிடலாம்.
காலிப்பளவர்
ஒவ்வொரு இதழாக எடுத்து சுத்தம் பார்த்து குருமாகுழம்பு காரம் அதிகமில்லாமல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வர உடல்பருமன் குறையும். குடற்புண் குணமாகும். புற்று நோயையும் குணமாக்கும். புற்று நோய் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட நோயின் வீரியம் குறையும்.
முருங்கைப் பூ
பூக்களை சேகரித்து சுத்தம் பார்த்து பசும்பாலில் போட்டு காய்ச்சி மாலை நேரத்தில் சாப்பிட தாதுபலம் பெறும். ஆண்மை அதிகரிக்கும். ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும்.
ரோஜாப்பூ இதழ்கள்
உதிர்ந்த ரோஜா இதழ்களை கூட்டு செய்து சாப்பிட இதயம் பலப்படும். மலச்சிக்கலை தீர்க்கும். இரத்தம் சுத்தியாகும். ஆரஞ்சுப் பழத்தை விட 5 மடங்கு சத்து அதிகம் கொண்டதால் அடிக்கடி சாப்பிடலாம். சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
செம்பருத்திப் பூ
தினமும் 5 பூக்களை மகரந்தம் நீக்கி அப்படியே சாப்பிட்டு வர இதயத்திற்கு வலுவைச் சேர்க்கும்.
கொன்றைப் பூ
நீர் எரிச்சல், மேகநோய் உடல் உஷ்ணம் குணமாகும். மருத்துவத்துக்கு பயன்படுகிறது.
மாம் பூ
இத்துடன் வேப்பம் பூ கலந்து சிறிது வெல்லம் சேர்த்துண்ண இரத்த விருத்தியை உண்டாக்கும். மருத்துவத்துக்கும் பயன்படுகிறது.
சிறுநாகப்பூ
உணவுக்கு மணம் சேர்க்கு இளைப்பு, இருமல் குணமாகும். ஆண்மைக் குறைவை போக்கும்.
செண்பகப் பூ
தலைமுடி உதிர்தலை தடுக்கும். அழகையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
குங்குமப் பூ
இரத்த சுத்தி செய்யும். இரத்த விருத்தி உண்டாக்கும் கர்ப்பிணி பெண்கள் 2 அரிசி எடை பசும் பாலில் கலந்து 8 மாதம் வரை சாப்பிட குழந்தை சிகப்பாகப் பிறக்கும்.
தூதுவளைப் பூ
பூக்களைப் பறித்து வந்து மல்லி, சீரகம், துவரம் பருப்பு ஆகியவற்றை வறுத்து பூவுடன் அரைத்து துவையலாக சாப்பிட சளிக்கோளாறு, இருமல் குணமாகும்.
மாதுளம் பூ
இத்துடன் வால் மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து காலை மாலை 1 சுண்டைக் காய் அளவு தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர மாத விலக்கு ஒழுங்காக வரும்.
தாமரைப் பூ
வெள்ளைத் தாமரை இதழ்களை உலர்த்தி சூரணம் செய்து 2 சிட்டிகை காலையில் சாப்பிட இரத்த சுத்தியாகும். இருதய பலவீனத்தை நீக்கும்.
கடுக்காய்ப் பூ
வயிற்றுப் புண், வயிற்றுப் போக்கு உடல் உஷ்ணம் ஆகியவை குணமாகும்.
தும்பைப் பூ
தொண்டைக் கோளாறு, டான்சில் போன்றவற்றை குணமாக்கும்.
நந்தியாவட்டைப் பூ
தினமும் 20 பூக்களை தண்ணீரில் போட்டு 3 மணி நேரம் கழித்து பூக்களை எடுத்துவிட்டு அந்த தண்ணீரால் கண்களைக் கழுவி வர தொடர்ந்து 40 நாட்கள் செய்ய கண்பார்வை தெளிவு பெறும்.
மல்லிகைப் பூ
குழந்தைக்கு தாய்பால் கொடுத்து அதை நிறுத்திவிட நினைக்கும் காலத்தில் தாய்ப்பால் அதிகம் சுரந்து தனங்கள் பெரிதாகி வலியைக் கொடுக்கும் அந்த சமயத்தில் இரவில் படுக்கும் முன்பு மல்லிகைப்பூக்களை தனங்களின் மேல் வைத்து துணியால் கட்டி காலையில் எடுத்துவிட வலி நீங்குவதுடன் மேற்கொண்டு பால் சுரப்பு நிற்கும்.