எந்தக் கிழங்கானாலும் முதலில் நன்றாகக் கழுவ வேண்டும் தோல் நீக்கக் கூடிய கிழங்குகளில் தோலை நீக்கி விட வேண்டும் வெள்ளை முள்ளங்கி, வாழையின் மேல் தண்டு, காரட் தவிர பூமிக்கு அடியில் விளையும் எந்தக் கிழங்கையும் – நீரிழிவு நோயாளிகள் சமையலில் சேர்த்து உண்ணக்கூடாது.
உருளைக்கிழங்கு
கொழுப்புச் சத்து நிறைந்தது. இதை இரண்டாக அறுத்து தீக்காயங்கள் மீது தடவ இதமாக இருக்கும். கால்களில் இருக்கும் கரும்படைகள் மீது அடிக்கடி தேய்த்து வர கரும்படை மறையும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் அடிக்கடி சாப்பிடக் கூடாது பொரியல் செய்தும் குருமாவில் போட்டும் சமைத்து உண்பர். உடல் சூடு குறையும். உடலுக்கு வலுவைத் தரும்.
கருணைக்கிழங்கு
சட்டிக்கருணை, விரல் கருணை என இரு வகை உள்ளது. சட்டிக்கருணை மேல் தோல் சீவியபின் கழுவி பொரியல் மட்டும் செய்துண்ணலாம். மூலநோய் உள்ளவர்களுக்கு நல்லது. விரல்கருணை வேக வைத்து தோலை உரித்து புளி குழம்பு வைத்து உண்ண வாதம், வயிற்று வலி குணமாகும்.
காரட் (மஞ்சள் கிழங்கு)
பொரியல் செய்தும், பச்சையாகவும் உண்ணலாம். ஆயுளை நீட்டிக்கும். கண் பார்வை தெளிவு பெறும். தொற்று நோய் வராமல் தடுக்கும். தாதுவை விருத்தி செய்யும் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோயின் வீரியம் குறைந்து முற்றிலும் குணமாகும்.
கோரைக்கிழங்கு
மருத்துவத்துக்கு மட்டுமே பயன்படும். 100 கிராம் சேகரித்து அரைத்து உடலில் பூசி குளித்துவர உடலில் தேவையில்லாத முடிகள் அகன்றுவிடும் தேகம் பளப்பளப்பாக இருக்கும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
வேகவைத்தும் பொரியல் செய்தும் உண்பர். மலத்தை இறுக்கும். வாயுப்பிடிப்பு உண்டாகும். அளவுடன் சாப்பிடலாம். வத்தல் போட்டு காய வைத்து குழம்பும் செய்வர் வேக வைத்த கிழங்கை சர்க்கரை நோயாளிகள் உண்ணக் கூடாது.
சேப்பங்கிழங்கு
பொரியல் செய்து சாப்பிட நரம்புகள் முறுக்கேறும். மலச்சிக்கலை நீக்கும். அறிவு கூர்மை பெறும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.
பனங்கிழங்கு
இதை உப்பிட்டு அவித்து உண்ண, பசியை மந்தப்படுத்தும் பித்தத்தை அதிகரிக்கும். வாயுவை உண்டாக்கும்.
பீட்ரூட்
பொரியல் செய்து சாப்பிட கல்லீரலைக் பலப்படுத்தும். இதில் உள்ள வெள்ளை ரகம், அதிகபலனைத் தரும். வெளிமூலத்தை ஆற்றவல்லது. கண்பார்வை தெளிவு பெறும்.
மரவள்ளிக்கிழங்கு (குச்சிவள்ளிக் கிழங்கு)
வேக வைத்து சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துண்ண சுவையாக இருக்கும். சுத்தமான மணிலா எண்ணெயில் சிப்ஸ் போட்டு சிறிதளவு மிளகாய்த்தூள், உப்புத்தூள் கலக்கி சாப்பிடும் போது தொட்டுக் கொள்ளலாம். மூலநோயாளிக்கு உதிரம் நிற்கும். மலத்தை இறுக்கும். பசியைக் குறைக்கும். தேங்காய் சேர்த்துண்ண இக்குறைகள் நீங்கும்.
மாவலியங்கிழங்கு
இதனை சிறுசிறுதுண்டுகளாக நறுக்கி பச்சைமிளகாய் மற்றும் உப்பு சிறிது சேர்த்து மோரில் ஊற வைத்து ஊறுகாயாக பயன்படுத்துவர். அதிக உஷ்ணமாகும்.
முள்ளங்கி கிழங்கு
இதில் வெள்ளை முள்ளங்கி, சிகப்பு முள்ளங்கி என இருவகை உண்டு. தோல் சீவி, சாம்பாரில் கலந்து சமையல் செய்வர். இருமல், பல்நோய், வயிறு இரைச்சல், தொண்டைக்கம்மல், மூலச்சூடு ஆகியவற்றுக்கு நல்லது கல்லீரல் நோய்க் குணமாகும். சிறு நீரகங்கள் பலம் பெறும், சிறுநீர் எரிச்சல் குறையும் நீரிழிவு நோயாளிகள் வெள்ளை முள்ளங்கி மட்டும் சாப்பிடலாம் சிகப்பு முள்ளங்கியை உண்ணக் கூடாது. வெள்ளை முள்ளங்கியை வாரத்தில் 2,3 நாள் சாப்பிட மேலே கூறிய நோய்களுக்கு நல்லது சிகப்பு முள்ளங்கியால் சீரண சக்தி கூடும். வயிற்று எரிச்சல் குறையும் கண்பார்வை தெளிவு பெறும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மெறுவங் கிழங்கு
இதன் கிழங்கை எடுத்து மேல் தோல் சீவி 2 செ.மீ சதுரத்தில் துண்டுகளாக்கி வெய்யிலில் உலர்த்தி 1 பாட்டலில் போட்டு வைத்துக் கொண்டு மொச்சக் கொட்டை தட்டைப்பயிறு கலந்து புளிக்குழம்பில் 20,30 துண்டுகளை போட்டு குழம்பு செய்து. கிழங்கை உண்ண மாவு போல் கரையும். மிருதுவாக இருக்கும். உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.
வாழைத்தண்டு
மேல்பாகத்தை வட்டவட்டமாக நறுக்கி பின் சிறு துண்டுகளாக குறுக்கி பொரியல் செய்தும் சாம்பாரில் போட்டும் உண்ணலாம். அடிக்கடி சாப்பிட சிறு நீரகத்தில் உள்ள உப்புபடிமத்தை துகள்களாக்கி சிறுநீருடன் வெளியேற்றும். சீரண சக்தியை அதிகரிக்கும். உப்பில்லாமல் சாப்பிட அதிக பலனைத்தரும். குடலில் தலைமுடியிருந்தால் மலத்துடன் வெளியேற்றும்.
வெற்றிலை வள்ளிக்கிழங்கு
உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து உண்ணலாம். மருத்துவப் பலன் குறிப்பிடும்படி இல்லை. மலத்தைக் கட்டும்.
bahis siteleri child porn wrtgdfgdfgdqq.oeqBUDJPH8pQ